நான் படித்ததும் ரசித்தும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
பல கோடி முதலீடு திரைப்படம் என்றாலும்
கிடைப்பது என்னவோ
ஒரு முழம் துணிதான்
பாவம் கதாநாயகி
கண்களாக நீ
கண்ணீராக நான் தெரியாமல் கூட
அழுது விடாதே
உன்னை விட்டு பிரிந்து விடுவேன்
நான் ......
மின்னலே என்று வர்ணித்தேன் அடுத்த கணமே இடிகளாய் அவளது அண்ணன்கள்
என் உயிர் போனால் உனக்கு அழுகை வருமோ வராதோ எனக்கு தெரியாது ..? ஆனால் உனக்கு அழுகை வந்தாலே என் உயிர் போய்விடும்
எட்டுபட்டி சூழ நடை பெற்ற எங்கள்
ஊர் திருவிழாவில்
சட்டென இறங்கினாள் மாரியாத்தா
எதிர் வீட்டு சாந்தி மீது,
என்ன வேண்டும் கேள் மகனே என்றாள்
ஆவேசம் கொண்டாலும் அழகு ததும்பும் அவளிடம்
அத்தனை பேரின் முன்பு எப்படி கேட்பது அவள் தான்
வேண்டும் என்று.....